குமாரசாமி முதல்வராகலன்னா அரசியல்ல 'ரிட்டயர்' ஆவாராம்!

Added : ஜன 21, 2023 | |
Advertisement
'நான் சொன்னது நடக்கலன்னா, அரசியல் ரிட்டயர்மென்ட் ஆயிடுவேன்'னு சொல்றதுக்கு இன்னொருத்தரும் வந்துட்டாரு.ஆமா, இவரு தன்னோட தாய் கட்சியில இருந்து 'காங்.,' கட்சிக்கு தன்னோட பிரெண்டோட போனாரு. அங்க எம்.எல்.சி.,யா இருந்தாரு. ஆனா, தனக்கு 'மினிஸ்டர் போஸ்ட் தரலன்னு உம்முன்னு இருந்தாரு.கடைசில அங்கயும் கோவிச்சிக்கிட்டு, திரும்பவும் தாய் கட்சியான ம.ஜ.த.,வுக்கு வந்துட்டாரு. இப்ப
 குமாரசாமி முதல்வராகலன்னா அரசியல்ல 'ரிட்டயர்' ஆவாராம்!

'நான் சொன்னது நடக்கலன்னா, அரசியல் ரிட்டயர்மென்ட் ஆயிடுவேன்'னு சொல்றதுக்கு இன்னொருத்தரும் வந்துட்டாரு.

ஆமா, இவரு தன்னோட தாய் கட்சியில இருந்து 'காங்.,' கட்சிக்கு தன்னோட பிரெண்டோட போனாரு. அங்க எம்.எல்.சி.,யா இருந்தாரு. ஆனா, தனக்கு 'மினிஸ்டர் போஸ்ட் தரலன்னு உம்முன்னு இருந்தாரு.

கடைசில அங்கயும் கோவிச்சிக்கிட்டு, திரும்பவும் தாய் கட்சியான ம.ஜ.த.,வுக்கு வந்துட்டாரு. இப்ப இந்த கட்சியோட ஸ்டேட் தலைவரா இருக்காரு. இவரு எந்த கட்சியில இருந்தாலும் எதிர்க்கட்சிய செமையா கிண்டல் பண்ணுவாரு. இப்போ அவர் பேசுனதை கேட்டு, எதிர்க்கட்சி காரங்க மட்டுமல்ல, பொது மக்களும் சிரிக்கிறாங்க.

விஜயபுராவுல நேத்து அவரு என்ன சொன்னாருன்னா, பிப்ரவரிக்குள்ள யார், யார் இவர் இருக்கிற கட்சிக்கு இடம் பெயருவாங்கன்னு சொன்ன நேத்தே, பெங்களூரு நெலமங்களா நகராட்சியில அவங்க கட்சிய சேர்ந்த 11 பேரு, காங்., கட்சியில இணைஞ்சிட்டாங்க.

என்னப்பா... அவரு சொன்ன அன்னிக்கே, அவங்க கட்சிக்காரங்க 11 பேர் வேற கட்சியில சேர்ந்துட்டாங்களேன்னு பலரும் சிரிச்சாங்க.

திரும்பவும், 'குமாரண்ணா சி.எம்., ஆகலைன்னா நா பொலிடிக்கல்ல இருந்து ரிட்டயர்மென்ட் வாங்க போறேன்'னு சொன்னதும், ஊரே சிரிக்குது. எல்லோரையும் போல இவரும் சொன்னதை யாரும் பெரிசா எடுத்துக்கிடல



- நமது நிருபர் -.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X