அவிநாசி:அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் பயணியர் விடுதி மாளிகை உள்ளது.
இங்குள்ள அறையில் தங்கி நெடுஞ்சாலை துறை அலுவலக ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தவர், திருமுருகன் 52. இரண்டு மனைவியுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் இவர், கடந்த 5ம் தேதி மாலை வீட்டில் சண்டையிட்டு அதன் காரணமாக யாரிடமும் சொல்லாமல் சென்றுள்ளார்.
இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில், திருமுருகனை கண்டுபிடித்து தரக் கோரி குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.