அவிநாசி:அவிநாசி மின் கோட்டத்தில், மின் இணைப்புடன், ஆதார் எண் இணைப்பதில், நகர மக்கள் ஆர்வம் காட்டியதால் நகரவாசிகள், 100 சதவீதம் இலக்கை எட்டியுள்ளனர்.
அவிநாசி மின் கோட்டத்தில், 22 பிரிவுகள் உள்ளன. மொத்தம், 2.10 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்புடன், ஆதார் எண் இணைக்கும் பணி சுறுசுறுப்புடன் நடந்து வரும் நிலையில், நகர மக்கள், ஆதார் எண் இணைப்பில் ஆர்வம் காட்டினர்.
விளைவாக, நகர பிரிவில் மட்டும், 9,479 மின் இணைப்புகள் உள்ளன; இதில், 100 சதவீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய பிரிவு அலுவலகங்களில் ஆதார் இணைப்புப்பணி மேற்கொள்ளப்படுகிறது.