பழங்கால நாணயங்களை சேகரித்து விவசாயி சாதனை

Added : ஜன 21, 2023 | |
Advertisement
சக மாணவன் வைத்திருந்த, வெள்ளி நாணயத்தை தன்னை தொட விடவில்லை என்பதால், அவமதிப்பாக கருதியவர், தற்போது பழங்கால நாணயங்களை சேகரித்து, அருங்காட்சியகம் அமைக்க தயாராகிறார்.உத்தர கன்னடா குமட்டாவின், கல்லப்பே கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிதானந்த ஹெக்டே, 65. இவர் இன்றைய இளம் தலைமுறையினருக்கு, முன் மாதிரியாக திகழ்கிறார்.இவர் பள்ளி மாணவராக இருந்த போது, ஒரு நாள் சக மாணவர்
 பழங்கால நாணயங்களை சேகரித்து  விவசாயி சாதனை



சக மாணவன் வைத்திருந்த, வெள்ளி நாணயத்தை தன்னை தொட விடவில்லை என்பதால், அவமதிப்பாக கருதியவர், தற்போது பழங்கால நாணயங்களை சேகரித்து, அருங்காட்சியகம் அமைக்க தயாராகிறார்.

உத்தர கன்னடா குமட்டாவின், கல்லப்பே கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிதானந்த ஹெக்டே, 65. இவர் இன்றைய இளம் தலைமுறையினருக்கு, முன் மாதிரியாக திகழ்கிறார்.

இவர் பள்ளி மாணவராக இருந்த போது, ஒரு நாள் சக மாணவர் ஒருவர், வெள்ளி நாணயங்களை கொண்டு வந்திருந்தார்.

இதைப் பார்த்த சிதானந்த ஹெக்டே, ஆசையுடன் தொட்டுப்பார்க்க முற்பட்டார். ஆனால் அந்த மாணவர் தொட விடவில்லை.

இதை அவமதிப்பாக கருதிய சிதானந்த ஹெக்டே, உலகின் அனைத்து நாணயங்களையும் பார்க்க வேண்டும் என, உறுதி பூண்டார். அன்றிலிருந்து நாணயங்களை சேகரிக்க துவங்கினார்.

தற்போது இவரிடம், வெள்ளி மட்டுமின்றி, தங்கம், செம்பு உட்பட 2,000 க்கும் மேற்பட்ட நாணயங்கள் உள்ளன. சோழர், விஜயநகர காலத்து நாணயங்களூம் உள்ளன. கங்கர்கள், ஹொய்சாலர்கள், ஈஸ்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்ட நாணயங்கள், பைசாக்களும் உள்ளனர்.

வெளிநாட்டு நாணயங்கள், 5, 6வது ஜார்ஜ் கிங் காலத்து நாணயங்கள், விக்டோரியாவின் 1900ம் ஆண்டின் நாணயம், அமெரிக்க டாலர், ஜப்பான், நைஜீரியா, சிங்கப்பூர் என, பல்வேறு நாடுகளின் நாணயங்களை சேகரித்துள்ளார்.

நாணயங்கள் மட்டுமின்றி, பழைய காலத்து இந்திய ரூபாய் நோட்டுகள், வெளிநாடுகளின் நோட்டுகள், தபால் தலைகளின் சேகரிப்புகளும், இவரிடம் உள்ளன. தபால் அலுவலகத்தில் முன் கூட்டியே பணத்தை செலுத்தி, புதிதாக வெளியிடப்படும் தபால் தலைகளை, தன் வீடு தேடி வரும்படி, ஏற்பாடு செய்துள்ளார்.

தன் சேகரிப்பில் உள்ள நாணயங்களை, பள்ளி, கல்லுாரிகள், பொது நிகழ்ச்சிகளில் கண்காட்சியில் வைத்து, இவற்றைப் பற்றிய தகவல்களை விவரிக்கிறார். நாணயங்கள் அருங்காட்சியகம் கட்டவும் தயாராகிறார். இவரது சாதனை, இன்றைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

சிதானந்த ஹெக்டே கூறியதாவது:

என்னிடம் உள்நாடு, வெளிநாடுகளின் 2,000 க்கும் மேற்பட்ட நாணயங்களின் சேகரிப்புகள் உள்ளன. அவ்வப்போது கண்காட்சிகளில் வைத்துள்ளேன்.

தற்போது எனக்கு வயதாகி விட்டதால், நாணயங்கள் பாழாகலாம் அல்லது திருடப்படலாம் என்ற அச்சம், என்னை வாட்டுகிறது.

பள்ளிகளில் அழைப்பு வந்தால் மட்டுமே, அங்கு சென்று நாணயங்களை கண்காட்சிக்கு வைக்கிறேன். என்னிடம் புராதன நாணையங்களும் உள்ளன. இவற்றை பார்க்க வேண்டும் என, மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.

என் தோட்டத்தில் விளைந்த 10.6 சுற்றளவு, நான்கு செ.மீ., நீளமான பாக்கு ஒன்று, நாட்டின் மிகப்பெரிய பாக்கு என்ற பெருமை பெற்றுள்ளது.

இது இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மூன்று கண்கள் கொண்ட பாக்கும் கூட, என்னிடம் உள்ளது. 25 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறேன்.

என்னிடம் பழங்காலத்து மரக் கலப்பை, சாம்பார் கிண்ணம் உட்பட, பல்வேறு பொருட்களும் உள்ளன. இதை அருங்காட்சியகம் வழியாக, பொது மக்கள் காண வாய்ப்பளிக்க வேண்டும் என்பது, என் விருப்பம். இதற்காக ஏற்பாடு செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X