திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அதிகாலையில் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர். ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில்.
கோவில்வழி பெரும்பண்ணை வரதராஜபெருமாள் கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், அலகுமலை ஆதிகைலாசநாத சுவாமி கோவில், முத்துக்குமாரசுவாமி கோவில், சாமளாபுரம் ஸ்ரீசோழீஸ்வரர் கோவில் என, திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், தை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிராமப்புற கோவில்களில், காலை, 11:00 மணிக்கு அபிேஷக பூஜையும், மதியம் அலங்காரபூஜைகளும் நடந்தது. தை அமாவாசை என்பதால், கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.