திருவள்ளூர்,-திருவள்ளூர் அம்சா நகரில், அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி, டவுன் போலீசார் அந்த கடையில் திடீர் சோதனையிட்டனர்.
அப்போது, தீபாவளிக்கு வாங்கிய தற்காலிக அனுமதியைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக, பட்டாசு விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து, கடையில் இருந்த, 5,000 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் மகாலிங்கம், 36, என்பவரை கைது செய்து, காவல்நிலைய ஜாமினில் அனுப்பி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement