திருவள்ளூர்,-திருவள்ளூர் அடுத்த, குன்னப்பாக்கம் பகுதியில் வேளாண் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உடன் ஆய்வு மேற்கொண்டார்.
தோட்டக்கலை மற்றும் தரிசு நிலம் மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக, பல்வேறு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், சப் - கலெக்டர் மகாபாரதி, வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.