புதுப்பட்டு,-கடம்பத்துார், புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
கடந்த 19ம் தேதி, தாய், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டிலிருந்த மகள் மாயமானது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து இவரது தாய் அளித்த புகாரைஅடுத்து, மப்பேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.