திருவள்ளூர்,-திருவள்ளூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை வாயிலாக, பிறப்பு முதல், 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், வரும் 24 - பிப்.17ம் தேதி வரை அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெற உள்ளது.
இம்மருத்துவ முகாமில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் தேசிய அடையாள அட்டை, அறுவை சிசிச்சை மற்றும் உதவி உபகரணம் தேவையுள்ளவர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.
இம்முகாமிற்கு வரும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் நான்கு புகைப்படம், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும் என, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.