திருத்தணி,-திருத்தணி அடுத்த, ஆற்காடுகுப்பம் ரெட்டி தெருவில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் பாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த, 60 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.
அதே தெருவில் மாவு அரைக்கும் அனிதா என்பவரின் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, மர்ம நபர்கள், 10 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். இதையடுத்து அதே தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஏதும் கிடைக்காததால் பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்றனர்.
அதேபோல் பூபதி என்பவரது வீட்டிலும் நகை, பணம் கிடைக்கவில்லை. கடைசியாக பக்தவத்சலம் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்த போது சத்தம் கேட்டு உரிமையாளர் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.
ஒரே தெருவில் ஐந்து வீடுகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி உள்ளனர். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement