திருப்பூர்:பொங்கல் முன்னிட்டு, தமிழக காவல் துறையில் பணியாற்றும் 3000 போலீசாருக்கு முதல்வரின் போலீஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், தமிழக போலீஸ் துறையில் பல்வேறு மாநகர, மாவட்ட போலீஸ் பிரிவுகளிலும், ரயில்வே, சி.பி.சி.ஐ.டி., குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப் பிரிவு, நுண்ணறிவு பிரிவு, ஆயுதப் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் முதல் நிலை காவலர், ஏட்டு, சிறப்பு எஸ்.ஐ., உள்ளிட்டோர் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் திருப்பூர் மாநகர போலீஸ் பிரிவைச் சேர்ந்த 20 பேர், மாவட்ட போலீஸ் துறையில் 39 பேருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் போலீசாருக்கு வரும் பிப்.,மாதம் முதல் மாதம் 400 ரூபாய் கூடுதல் படியாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.