திருத்தணி,--திருத்தணி அடுத்த, ஆர்.வி.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் குமார், 35. இவர் நேற்று முன்தினம், மனைவி மேனகாவுடன், சொந்தமான பூச்செடியில் பூப்பறித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், அண்ணாமலை, சிவா, துர்கா ஆகியோர் முன்விரோதம் காரணமாக, பூந்தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த தம்பதியை இரும்புக் கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த குமாரை, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து மேனகா அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் மேற்கண்ட நான்கு பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.