திருப்பூர்:''ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., வெற்றி பெறும்,'' என, பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தெற்கு தொகுதி அளவிலான, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சூசையாபுரத்தில் நேற்று நடந்தது. எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''முகவரியில்லாத சாமானியர்களை, எம்.எல்.ஏ.,களாகவும், அமைச்சராகவும் எம்.ஜி.ஆர்., மாற்றிக்காட்டினார். எம்.ஜி.ஆர்., - ஜெ., வழியில், அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதே, தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. அதற்கு அச்சாரமாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 50 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெறும்,'' என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் குணசேகரன், நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, மகேஷ்ராம், கருணாகரன், கேசவன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள் உட்பட பலர் பேசினர்.