பொங்கலுார்:அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் பொங்கலூர் அலகுமலை அருகே உள்ள சங்கதலைவர் பழனிசாமி தோட்டத்தில் நடந்தது. கூட்டத்தில், வரும் பிப்., 19-ல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது, நிகழ்ச்சிக்கு, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை அழைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொங்கலுார் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சிவாச்சலம், தி.மு.க., ஒன்றிய அவை தலைவர் சண்முகம், ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்க பொருளாளர் சுப்ரமணி, செயலாளர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.