பொன்னேரி,---பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட அப்துல்கலாம் நகர், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகள் ஆரணி ஆற்றின் அருகே உள்ளன.
ஆற்றங்கரையோரப் பகுதிகளில், தனிநபர்கள் சிலர் பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இவை உரிய முறையில் பராமரிக்கப்படாததால், நாள் முழுதும் மேற்கண்ட குடியிருப்புப் பகுதிகளில் இரை தேடி சுற்றித் திரிகின்றன.
தெருக்களில் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளைக் கிளறி, சாக்கடைகளில் புரண்டும் குடியிருப்புவாசிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
பன்றிகளால் குடியிருப்புவாசிகள் சுகாதார பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.