பந்தலுார்:பந்தலுாரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, வனக் குழுவினரை காட்டு யானைகள் துரத்தின.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளதால், வனக்குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று எலியாஸ் கடை டான்டீ பகுதியில், வனக்குழுவினர் மற்றும் தொழிலாளர்களை மூன்று யானைகள் துரத்தின. அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வனத்துறையினர் கூறுகையில்,'இங்குள்ள புல்வெளி பகுதிகளில், பல யானைகள் முகாமிட்டுள்ளன. இவை அவ்வப்போது, தேயிலை தோட்டங்களுக்கு வருவதால் தொழிலாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்றனர்.