திருவாலங்காடு,--ஆற்காடு குப்பம் ஊராட்சி, ரெட்டி தெருவில் வசிப்பவர் பாலகிருஷ்ணன், 65. நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டின் பின்புறக் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் பீரோவில் வைத்திருந்த, 60 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தனர்.
பின், அதே பகுதியில் வீட்டில் மாவு அரைக்கும் கடை நடத்தி வரும் ஹரிதா, 31, என்பவர், வீட்டின் முன்பக்க கதவை உடைத்த திருடர்கள் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த, 9,000 ரூபாயை திருடிச் சென்றனர்.
அடுத்தடுத்த வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து, 69 ஆயிரம் ரூபாய் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கனகம்மாசத்திரம் போலீசார் திருடர்களைத் தேடி வருகின்றனர்.