குன்னுர்;குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்தில், 74வது குடியரசு தின ஓட்ட பந்தயம், சைக்கிள் பேரணி நடந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்தில், 74வது குடியரசு தினத்தை நினைவுகூரும் வகையில், 'என்டூரா 23' என்ற தலைப்பில், 10 கி.மீ., ஓட்டபந்தயம் மற்றும் 30 கி.மீ., சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.
கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில்குமார் யாதவ் துவக்கி வைத்தார்.
ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆண்கள், பெண்கள், என, பல்வேறு பிரிவுகளில், 75 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு, ராணுவ மருத்துவமனை கமாண்டன்ட் பிரிகேடியர் வர்க்கீஸ், சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.