வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: காங்., முன்னாள் தலைவர் ராகுல் ஏப்ரலில் தமிழகம் வருவார் என சொல்லப்படுகிறது. அவர் இரண்டு நாள் சென்னையில் தங்கி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பல தலைவர்களை சந்திக்க உள்ளார். அப்போது தமிழக அரசியல் நிலை, பார்லிமென்ட் தேர்தலில் தி.மு.க.,விடமிருந்து எத்தனை தொகுதிகளைப் பெறுவது என பல விஷயங்களை ராகுல் பேசுவாராம்.
![]()
|
பா.ம.க., தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் என பலரையும் சந்திக்கிறார். பா.ம.க.,வும், மக்கள் நீதி மய்யமும் தி.மு.க., கூட்டணிக்குள் வர வேண்டும் என ராகுல் விரும்புகிறாராம்.
![]()
|
'தற்போது, வாக்காளர்கள் மனநிலை தி.மு.க.,விற்கு எதிராக மாறியுள்ளது. எனவே கூட்டணியை பலப்படுத்த வேண்டும். ஏற்கனவே அ.தி.மு.க., பிளவுபட்டுள்ள நிலையில், இவர்களை சேர்த்தால், தமிழகத்தில் அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம் ராகுல்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement