வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், கடந்த 2009 முதல் 2017 வரை அந்நாட்டின் துணை அதிபராக பதவி வகித்திருந்தார். அந்த காலக்கட்டத்திலான அரசின் ரகசிய ஆவணங்கள் தற்போது ஜோ பைடனின் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து, சில தினங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 13 மணி நேரம் நடந்தது. இந்த சோதனையிலும், ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.