லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மன்டெரே பார்க் பகுதியில் நடந்த சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
சீன புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால், பயந்து போன மக்கள் அருகில் இருந்த வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தஞ்சம் புகந்தனர். மிஷின் கன்னுடன் ஒருவர் அங்கு சுற்றி வருவதாக, சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்ற ஒருவர் கூறியுள்ளார்.

முதற்கட்ட தகவலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என்ன ஆனார் என்ற தகவலும் கிடைக்கவில்லை. துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்த உடன் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.