லக்னோ: உ.பி.,மாநிலத்தில் ஓடும் ரயிலில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் டிடிஇ கைது செய்யப்பட்டுள்ளார்.
![]()
|
உ.பி.,மாநிலம் சம்பல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சந்தவுசி பகுதியில் இருந்து பிரயாக்ராஜின் சுபதேர்கஞ் பகுதிக்கு ரயில் பயணம் செய்தார். அப்போது அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகராக (டிடிஇ) ராஜூ சிங் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் ரயிலில் பயணம் செய்த குறிப்பிட்ட பெண்ணிற்கு ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் டிடிஇ அப்பெண்ணை ஏசி கோச்சில் பயணிக்க சலுகை அளித்து உள்ளார். தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் மற்றும், தனக்கு அறிமுகம் இல்லாத சிலர் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சம்பந்தப்பட்ட பெண் ரயில்வே போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
![]()
|
புகாரின் பேரில் டிடிஇ ராஜூசிங் கைது செய்யப்பட்டார். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் கடந்த 16ம் தேதி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement