இந்தியாவில் இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் நோட் 12i என்ற மாடலை இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 60Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. மீடியாடெக் G85 SoC பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்கும். 3ஜிபி+32ஜிபி மற்றும் 4ஜிபி+ 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்டில் வெளிவர உள்ளது. பேட்டரி 5000எம்எச்ஏ திறன் கொண்டது.33வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி உள்ளது. டைப் சி மாடல் சார்ஜிங் கேபிளுடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா 2MP டெப்த் சென்சார் கேமரா QVGA AI lens என மூன்று கேமரா உள்ளது. 8MP செல்ஃபி கேமராவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி பேண்ட்களுடன் வருகிறது. இதன் விலை ரூ.12000-க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.