கூடலுார்:ஊட்டி தேசிய நெடுஞ்சாலை அனுமாபுரம் -ஊசிமலை இடையே, 74 கோடி ரூபாய் நிதி மதிப்பில் சீரமைப்பு பணி துவங்கி உள்ளது.
கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி, சீரமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை துறையினால் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அனுமாபுரம்-ஊசிமலை வரையிலான, 16 கி.மீ., துாரம் சாலையை, 74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'அனுமாபுரம் -ஊசிமலை இடைப்பட்ட, 16 கி.மீ., சாலையில், தேவையான இடங்களில் தடுப்பு சுவர் மற்றும் மழைநீர் வழிந்தோட வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே, சுற்றுலா பயணிகள் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என்றனர்.