ஊட்டி;ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடந்தது.
தேசிய பசுமைப்படை, பிரீக்ஸ் நினைவு மேல்நிலைப்பள்ளி சார்பில், ஊட்டியில் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சரவணகுமார் சந்தர் தலைமை வகித்தார். பள்ளி தேசிய பசுமை படை பொறுப்பாளர் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.
பசுமை படை, குன்னுார் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில்,''இளைய தலைமுறையினர் துரித உணவு பழக்கங்களால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இழந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, மாணவர்களை கொண்டு, பள்ளி வளாகத்தில் பாரம்பரிய உணவு கண்காட்சியை நடத்துவது பெரும் பயனை ஏற்படுத்தும்,'' என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம், பாரம்பரிய உணவால் ஏற்படும் பயன் குறித்து, மாணவர்கள் விளக்கம் அளித்தனர். சிறந்த பாரம்பரிய உணவை, பிரீக்ஸ் பள்ளி முன்னாள் மாணவர் ராதாகிருஷ்ணன் தேர்வு செய்தார்.