கூடலுார்:கர்நாடகாவில் இருந்து, கூடலுாருக்கு புகையிலை பொருட்களை கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக - கர்நாடக எல்லையான, முதுமலை கக்கநல்லா சோதனை சாவடியில், கர்நாடகாவில் இருந்து ஊட்டிக்கு வந்த, கர்நாடக அரசு பஸ்சில் நேற்று முன்தினம், மாலை போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில், கூடலுாரை சேர்ந்த முகமதுஅலி,56, என்பவர், தமிழகத்தில் தடை செய்யபட்ட, 150 பாக்கெட் புகையிலை பொருட்களை கடத்தி வருவது தெரிய வந்தது.
போலீசார் அதனை பறிமுதல் செய்து, மசினகுடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது அலியை கைது செய்தனர்.