சாலையில் திரியும் மாடுகளால்விபத்து ஏற்படும் அபாயம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை வீட்டில், மாட்டு கொட்டகையில் கட்டி வைத்து பராமரிக்காமல், மேய்ச்சலுக்காக அவிழ்த்து வெளியே விட்டு விடுகின்றனர். நகரின் பிரதான சாலையான ரயில்வே சாலை, காந்தி சாலை, காமராஜர் சாலை, நான்கு ராஜ வீதி பகுதிகளில் குப்பையில் கிடக்கும் உணவுகள், பழக்கடைகளில் இருந்து வீசப்படும் பழக்கழிவுகளை உண்பதற்காக சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்களுக்கு அதிகபட்ச அபராதம் தொகை விதிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.மதனகோபால், காஞ்சிபுரம்.
பேருந்து நிலையத்தில்
தபால் அலுவலகம் தேவை
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அங்கு தபால் அலுவலகம் வசதி கிடையாது. இதனால் நீண்ட துாரம் சென்று தபால் அனுப்புவதை தவிர்த்து மக்கள் அருகில் உள்ள தனியார் கொரியர் சர்வீசில் அதிக கட்டணம் கொடுத்து அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. 5 ரூபாய் செலவு செய்து தபாலில் அனுப்ப வேண்டிதை 50 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. மற்ற பேருந்து நிலையம் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தபால் பெட்டிகள் வைக்க வேண்டும்.
-அ. அறிவழகன், திருப்புலிவனம்.