மாமல்லபுரம் : மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசின் இந்தியாவுக்கான துாதர் எலிஸ்கா ஜிகோவா, நேற்று மாமல்லபுரம் சிற்பங்களை கண்டு ரசித்தார்.
மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில், சுற்றுலா அலுவலர் சக்திவேல், அவரை வரவேற்றார்.
இக்கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்டவற்றை, கண்டு ரசித்தார்.
இங்குள்ள, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதியில், அவருக்கு விருந்தளிக்கப்பட்டது. பின், விடுதி வளாக கடற்கரை பகுதியில், உற்சாகத்துடன் உலவினார். அதன்பின், முட்டுக்காடு, தக் ஷின்சித்ரா பாரம்பரிய வீடுகள் வளாகத்தை பார்வையிட்டார்.