உடுமலை:வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், மகா கனி மரக்கன்றுகளால் பசுமையாக மாறுகிறது.
வனத்துக்குள் திருப்பூர்-8 திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால், உடுமலை பகுதிகளில், இலக்கை தாண்டியும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், குடிமங்கலம், வடுகபாளையம், லிங்கமநாயக்கன்புதுாரை சேர்ந்த, சுந்தரராஜ் - கலா ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 1,025 மகா கனி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
அதே போல், கொமரலிங்கம் இளங்கோவுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 500 மகா கனி மரக்கன்றுகள் நடப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடவு செய்து, பராமரிக்க விருப்பம் உள்ள விவசாயிகள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.