குப்பையை அகற்றணும்
உடுமலை ராஜேந்திரா ரோட்டிலுள்ள சந்தையில், குப்பை, காய்கறி கழிவுகள் கொட்டப்படுகின்றன. அவை அகற்றப்படாமல் அங்கேயே தேங்கியுள்ளன. இதனால், துர்நாற்றம் வீசி, நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இக்குப்பையை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.
- அனீஷ், உடுமலை.
துார்வார வேண்டும்
உடுமலை அருகே சாளையூர் கிராமத்தில், சாக்கடை பல நாட்களாக துார்வாரப்படாமல் குப்பை, கழிவுகள் தேங்கிக்கிடக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, இந்த சாக்கடையை ஊராட்சி நிர்வாகத்தினர் துார்வார வேண்டும்.
- சேனாதிபதி, சாளையூர்.
நோய் அபாயம்
உடுமலை கொழுமம் ரோடு, அமுதராணி பஸ் நிறுத்தம் அருகில், குப்பை மலை போல் தேங்கியுள்ளது. இவை பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இக்குப்பையை கணக்கம்பாைளயம் ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும்.
- மோகன்குமார், உடுமலை.
பணியை விரைவுபடுத்தணும்
உடுமலை பைபாஸ் ரோட்டில், மழைநீர் வடிகால் பணி பாதியில் நிற்கிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இப்பணியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகேஷ், உடுமலை.
செயல்படாத சிக்னல்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால், நெடுஞ்சாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. எனவே, வாகனங்களை கட்டுப்படுத்த வைக்கப்பட்டுள்ள சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமமூர்த்தி, உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அந்த ரோட்டில், வாகனங்களை நிறுத்துவதை போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும்.
- கார்த்திக், உடுமலை.
சிக்னல் வேண்டும்
உடுமலை- திருமூர்த்தி மலை ரோட்டில், ஜல்லிபட்டி நால் ரோடு உள்ளது. இதில் கொழுமம் வழியாக செல்லும் பழநி ரோடும் சந்திக்கின்றன. இதனால், அதிகப்படியான வாகனங்கள் இதன் வழியாக செல்கின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.
- ராமசாமி, உடுமலை.
பூங்காவை திறக்கணும்
திருமூர்த்தி அணையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இப்பூங்கா பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைகின்றனர். எனவே, இப்பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
- சங்கர், உடுமலை.
பெண்கள் பாதிப்பு
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் எதிரில் பாலாறு செல்கிறது. விேசஷ நாட்களில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர். ஆனால், அங்கு பெண்கள் உடைமாற்றும் அறை இல்லை. இதனால், அவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, உடை மாற்றும் அறையை அறநிலையத்துறையினர் அமைக்க வேண்டும்.
- சாந்தி, உடுமலை.
பூங்கா பொலிவுபடுத்தணும்
உடுமலை அருகே அமராவதி அணையில் சிறுவர் பூங்கா உள்ளது. இப்பூங்கா பராமரிப்பின்றி, பொலிவிழந்து காணப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர் இதை பார்த்து வேதனையடைகின்றனர். எனவே, பொதுப்பணித்துறையினர் இப்பூங்காவை சீரமைத்து அழகுபடுத்த வேண்டும்.
-கணேசன், உடுமலை.