அரியலுாரில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கான ஆட்சி; திறமையற்ற முதல்வராக ஸ்டாலின் உள்ளார்; அவரது குடும்பம் தான் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இந்த, தி.மு.க., ஆட்சியில், 'கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன்' தான் நடைபெற்று வருகிறது. நல்ல, 'கலெக் ஷன்' கொடுக்கும் அமைச்சர்களே, ஸ்டாலினுக்கு சிறந்த அமைச்சர்கள். கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன் மட்டுமே, தி.மு.க., அரசின் ஒரே நோக்கம்' என்றார்.
கட்சி நிர்வாகி ஒருவர், 'இவரு எப்ப பாரு, தேய்ந்து போன, 'டேப் ரெக்கார்டர்' மாதிரி, ஒரே டயலாக்கை எல்லா மேடையிலும் பேசிக்கிட்டு இருக்காரு... மேடை கிடைத்தால், தி.மு.க., ஆட்சியின் அவலங்களை புள்ளி விபரங்களோட கிழிச்சு தொங்க விட வேண்டாமா...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.