பெரம்பலுார் : -பெரம்பலுார் அருகே, மான் வேட்டையாடிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் போலீஸ் குழுவினர், ஆடு திருடர்களை பிடிப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு, பெரம்பலுாரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தம்பிரான்பட்டி பகுதியில் வந்த, 'டாடா மேஜிக்' ஆட்டோ வாகனத்தை நிறுத்தி, சோதனை செய்தனர்.
அதில், உரிமம் இல்லாத இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வேட்டையாடி உயிரிழந்த மூன்று மான்களின் உடல்கள் இருந்தன.
ஆட்டோவில் இருந்த ஐந்து பேரை பிடித்து, போலீஸ் குழுவினர் சோதனை செய்தனர். அவர்களிடம், இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் மான்களின் உடல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதில், 24 - 33 வயது வரையிலான ஐந்து பேர், வன விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்தது தெரிய வந்தது.
வேட்டையாடிய பகுதி திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்டதாக இருந்ததால், திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம், நாட்டு துப்பாக்கிகள் மற்றும் ஆட்டோ வாகனத்துடன் ஐந்து பேரையும் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.