பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் இருந்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், ஆந்திரா, மும்பை, வடமாநிலத்தில் சில பகுதிகளுக்கும் இளநீர் அனுப்பப்படுகிறது. இளநீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், வரத்து குறைந்து வருவதால், விலை அதிகரித்துள்ளது.
இந்த வாரம், தரமான வீரிய ஒட்டு ரக இளநீர் விலை, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 21 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 7,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
இத்தகவலை, ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.