உடுமலை;உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், குட்டைத்திடல் மைதானத்தில், திருவள்ளுவர் திருநாள் விழா, நடந்தது.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் கவுரவத் தலைவர் முத்துக்குமாரமசாமி தலைமை வகித்தார். அமைப்பின் துணைத்தலைவர் ராஜசுந்தரம் வரவேற்றார். குடிமங்கலம் விண்ட்கேர் நிர்வாக இயக்குனர் அந்தோணிராஜ், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் மதியழகன், வரலாற்று ஆய்வாளர் ராபின், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில், பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில், முதல் மதிப்பெண் பெற்ற 78 மாணவர்களுக்கு, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
எழுத்தாளர் பவா. செல்லதுரைக்கு, உடுமலை நாராயணகவி சிறப்பு விருது வழங்கப்பட்டது. முன்னதாக, நஞ்சேகவுண்டன்புதூர் வள்ளிக்கும்மி ஆட்டத்தினரின் குழந்தைகளின், 'கொஞ்சும் சலங்கை' நிகழ்ச்சி நடைபெற்றது.
உடுமலை ராமசாமி நகர் வீரத்தமிழர் அறக்கட்டளை சிலம்பாட்டக் குழுவினரின் பாரம்பரிய சிலம்பாட்டமும் நடைபெற்றது. பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி, பூளவாடி நடுநிலைப்பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
பள்ளி, கல்லுாரிகளுக்கு, திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் செய்திருந்தனர்.