பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நடந்த சலங்கை பூஜையில், மாணவியர் முழுத்திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
பொள்ளாச்சி நவரச நாட்டியாலயா சார்பில், சலங்கைபூஜை, கந்த மஹாலில் நடந்தது. ஸ்ரீ சரஸ்வதி கலாலயா பரத நாட்டியப்பள்ளி இயக்குனர் முரளி தலைமை வகித்தார்.
பரத நாட்டியாலயா ஆசிரியையின், நட்டுவாங்கம், அரவிந்த் ஜெயராமனின் வாய்ப்பாட்டு, நவீனின் மிருதங்கம், சிவராமகிருஷ்ணன் வயலின் இசையில் மாணவியர் நடனமாடினர்.
புஷ்பாஞ்சலி, விநாயகர், முருகன் கவுத்துவம், ஆடிக்கொண்டார் கீர்த்தனை, ஜனனி... ஜனனி, கிருஷ்ணா நீ பேகனே, விஷமக்கார கண்ணன், பழம் நீயப்பா, அலாரிப்பு, பாருக்குள்ளே நல்ல நாடு போன்ற பாடல்கள் மற்றும் நாட்டிய உருப்படிகளுக்கு மாணவியர் நடனமாடி அசத்தினர்.
நவரசங்களை வெளிப்படுத்தி நடனமாடிய மாணவியரை, பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். பாடல்களுக்கு ஏற்ப நடன அசைவை மாற்றி ஆடி அசத்தினர். இதற்கான ஏற்பாட்டினை நவரச நாட்டியாலயா ஆசிரியை கீதா, பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.