வால்பாறை:வால்பாறை மண்டல ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட துணைத்தலைவர் சேகர் தலைமையில் நடந்தது. கோட்ட செயலாளர்கள் பாலசந்தர், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அண்ணாதுரை பேசினார்.
கூட்டத்தில், தேசபக்தியை ஒவ்வொருவரின் மனதிலும் விதைக்கும் வகையில், ஒவ்வொரு பகுதியிலும் பாரத மாதா பூஜை நடத்த வேண்டும். இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த, அனைத்து இடங்களிலும் கிளை கமிட்டி அமைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.