பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், உழவர் சந்தை, காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.
காந்தி மார்க்கெட்டில் ஏலம் எடுக்கும் வியாபாரிகள், காய்கறியை கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காய்கறிகளின் விலை உயர்ந்தது. பனிப்பொழிவு போன்ற காரணங்களினால், சீரான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில காய்கறிகள் விலை உயர்ந்தும், சில காய்கறிகளின் விலை குறைந்தும் உள்ளது.
உழவர் சந்தை நிலவரப்படி, கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி, 25 - 30 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, 30 - 35 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. வெள்ளை கத்தரி, கொத்தவரை, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றுக்கு, கடந்த வார விலையே தொடர்கிறது.
வெண்டைக்காய் விலை, கடந்த வாரத்தை விட, ஐந்து ரூபாய் குறைந்து, 45 - 55 ரூபாயாக இருந்தது. கடந்த வாரம், 40 - 45 ரூபாய்க்கு விற்பனையான அவரைக்காய், 25 - 30 ரூபாயாக குறைந்தது.
கடந்த வாரம், 40 - 45 ரூபாய்க்கு விற்ற பீர்க்கன்காய், 35 -45 ரூபாயாக இருந்தது. காய்கறிகளின் விலையில், பெரிய அளவில் மாற்றம் இல்லாததால் விற்பனை எப்போதும் போல இருந்தததாக, விவசாயிகள், அதிகாரிகள் தெரிவித்தனர்.