கோவை:மாவட்ட அளவிலான 'ஏ' டிவிஷன் கால்பந்து 'லீக்' போட்டியில், ரத்தினம் எப்.சி., அணி, 2 கோல் அடித்து வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கால்பந்து சங்கம் மற்றும் புளூபேண்ட் ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கால்பந்து 'ஏ' டிவிஷன் 'லீக்' போட்டிகள், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
போட்டியில், ரத்தினம் எப்.சி., -- பி.பி.டி.எஸ்., அணிகள் மோதின. ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரத்தினம் அணி, 2 -0 என்ற கோல் கணக்கில், பி.பி.டி.எஸ்., அணியை வென்றது.