கோவை:தீத்திபாளையம், சி.எம்.சி., சர்வதேச பள்ளியில், ஒரே நேரத்தில், ஒரு மணி நேரம் ஆயிரம் மாணவர்கள் சிலம்பம் சுற்றி, திறமையை வெளிப்படுத்தினர்.
கோவை, 'பைட்டர் அகாடமி' மற்றும் நோபல் உலக சாதனை அமைப்பு இணைந்து, ஒரே நேரத்தில் ஆயிரம் மாணவர்கள் இணைந்து சிலம்பம் சுற்றும் சாதனை முயற்சி, தீத்திபாளையம் சி.எம்.சி., சர்வதேச பள்ளியில் நடந்தது.
சி.எம்.சி., சர்வதேச பள்ளியின் தாளாளர் நாதன் துவக்கி வைத்தார். இதில், யோகா, சிலம்பம், கராத்தே, வில்வித்தை, ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் மாணவர்கள் என, ஆயிரம் பேர் இணைந்து, ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
ஒருங்கிணைப்பாளராக கராத்தே பயிற்சியாளர் ரமேஷ்குமார் செயல்பட்டார். பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.