மேட்டுப்பாளையம்:தேசியளவில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில், சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள், 3ம் இடம் பிடித்து அசத்தினர்.
ஹரியானா மாநிலத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே, தேசிய குத்துச்சண்டை போட்டி நடந்தது. இந்தியாவில், ஆறு மண்டலங்களில் இருந்து, 1,600 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தெற்கு மண்டலத்தின் சார்பில் பங்கேற்ற பள்ளிகளில், மேட்டுப்பாளையம் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியிலிருந்து, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில், தரணிஷ், ஆதிஷ், ஸ்ரீராம் சுந்தர், பெண்கள் பிரிவில், ஸ்ரீவித்யா, ரஷிதா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், 19 வயதுக்கு உட்பட்ட, 57 கிலோ எடை பிரிவில், ஸ்ரீவித்யா தேசியளவில் 3ம் இடம் பெற்று வெண்கலம் வென்றார். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில், ரஷிதா மூன்றாம் இடம் பிடித்தார்.
இவர்களை, பள்ளி நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், செயலர் மோகன்தாஸ், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.