மின் விளக்கு கம்பத்தால் அபாயம்
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் 48வது வார்டில் சாஸ்திரி நகர் உள்ளது. ஐ.ஏ.எப்., சாலையையொட்டி அமைந்துள்ள இப்பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த சாலையில் அமைந்துள்ள, மின் விளக்கு கம்பம் சேதமடைந்து, அருகில் உள்ள மின் கம்பத்தின் மீது சாய்ந்த நிலையில் உள்ளது. அத்துடன், மின் கம்பியில் உரசும் விதமாக உள்ளதால், விபத்து அபாயம் நிலவுகிறது.
இது குறித்து, பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
விபத்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து, மின் விளக்கு கம்பத்தை சீரமைத்து, மின் விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.