மனைவிக்கு 'டார்ச்சர்'; கணவனுக்கு 'காப்பு'

Added : ஜன 23, 2023 | |
Advertisement
பெரம்பலுார், ஜன. 23-பெரம்பலுார் அருகே, மனைவிக்கு, 'செக்ஸ் டார்ச்சர்' கொடுத்த கணவனை, அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.பெரம்பலுார் மாவட்டம், கோனேரிபாளையம் பாரதி நகரைச் சேர்ந்த குமார் மகள் அகிலா, 25. ஹோமியோபதி டாக்டர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் விமல், 31; இன்ஜினியர். இருவருக்கும், 2021ல் திருமணம் நடந்தது. பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த விமல், திருமணமான



பெரம்பலுார், ஜன. 23-

பெரம்பலுார் அருகே, மனைவிக்கு, 'செக்ஸ் டார்ச்சர்' கொடுத்த கணவனை, அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், கோனேரிபாளையம் பாரதி நகரைச் சேர்ந்த குமார் மகள் அகிலா, 25. ஹோமியோபதி டாக்டர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் விமல், 31; இன்ஜினியர். இருவருக்கும், 2021ல் திருமணம் நடந்தது.

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த விமல், திருமணமான நாளில் இருந்தே அகிலாவுக்கும், செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்.

அவருடன் உறவு கொண்டதை, 'வீடியோ' எடுத்தது; உடலில் சூடு வைத்தது என பல விதமாக கொடுமை செய்த அவர், 50 சவரன் நகை மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை வரதட்சணை கேட்டும் தொந்தரவு செய்துள்ளார்.

இதற்கு, விமலின் தந்தை இளங்கோவன், தாய் விஜயலட்சுமி, அக்கா மீனா, அவரது கணவர் சிவா ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

இது குறித்து, பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசில் அகிலா கொடுத்த புகார்படி, இன்ஸ்பெக்டர் கலா வழக்கு பதிந்து, விமலை கைது செய்தார். தலைமறைவான மற்ற நான்கு பேரையும் தேடி வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X