ராயபுரம்:ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட 53வது வார்டில், மூலக்கொத்தளம் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 1,044 வீடுகள் உள்ளன.
இதன் அருகில் ராமதாஸ் நகர், காட்பாடா பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தியிடம் மனு அளித்தனர். மக்கள் பயன்பெறும் வகையில், 30 லட்சம் ரூபாய் செலவில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான கட்டுமானப் பணியை ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த பணிகள், ஆறு மாதத்திற்குள் நிறைவடையும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement