புளியந்தோப்பு:புளியந்தோப்பு, பெரியார் நகர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ரவி, 59; எலக்ட்ரீஷியன்.
நேற்று முன்தினம், புளியந்தோப்பு, மோதிலால் நேரு தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த, அதே பகுதி, குருசாமி நகரைச் சேர்ந்த ராகுல், 23, கத்தியைக் காட்டி மிரட்டி, ரவியை தாக்கி, அவரது மொபைல் போனை பறித்து தப்பினார்.
இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், நேற்று காலை, ராகுலை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.