வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என கவர்னர் ரவி, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

இந்திய தேசத்தின் விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களில் நேதாஜி என அழைக்கப்படுபவர் சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி என்றால் இந்தியில் (respectable leader) மரியாதைக்குரிய தலைவர் என பொருள்.
அந்த மரியாதைக்குரிய ஒப்பற்ற தலைவரின் 126-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா இன்று(ஜன.,23) நடை பெற்றது.

நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: இந்தியாவின் வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை. இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை.
சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே சுதந்திர போராட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.