வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளாக மஹாராஷ்டிர கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநில கவர்னராக இருப்பவர் பகத் சிங் கோஷ்யாரி. இவர் தற்போது தனது பதவியில் இருந்த விலக விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புனிதர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் வீரம்மிக்க போராளிகளின் பூமியான மஹாராஷ்டிரா போன்ற ஒரு சிறந்த மாநிலத்தின் கவர்னராக பணியாற்றுவது எனக்கு ஒரு முழுமையான மரியாதை மற்றும் பாக்கியமாக கருதுகிறேன். மஹா., மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு அளித்த அன்பை என்றும் மறக்கமாட்டேன்.
பிரதமர் மோடி சமீபத்தில் மும்பை வந்திருந்தபோது அவரிடம் அனைத்து அரசியல் பொறுப்புகளிலிருந்தும் விடுபட்டு, எனது வாழ்நாள் முழுவதையும் வாசிப்பு, எழுத்து மற்றும் பிற செயல்பாடுகளில் செலவிட விரும்புவதாக தெரிவித்தேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் கவர்னர் பொறுப்பில் இருந்து அவர் விரைவில் ராஜினாமா செய்வார் அல்லது அவரை மத்திய அரசு விடுவிக்கும் எனத் தெரிகிறது. கவர்னர் பதவியில் இருந்து கோஷ்யாரி திடீரென விலக விரும்புவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.