அமில மழையின் ஆபத்து
அமில மழை (ஆசிட் ரெயின்) என்பது அதிகளவு அமிலத் தன்மை உடைய மழை. காற்றை மாசுபடுத்தும் சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு காற்றில் கலப்பதால் இது பெய்கிறது. சாதாரண மழையில் அமிலத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். வாகனங்களின் புகை, தொழிற்சாலைப் புகை, குப்பைகள் எரிப்பதால் ஏற்படும் புகை போன்றவை காற்றில் கலப்பதன் மூலம், அமில மழை உண்டாகிறது. எரிமலை சீற்றத்தின் போது இயற்கையாகவே அமில மழை உண்டாகிறது. இதனால் நிலம், நீர்பரப்புகளில் அமிலம் படிதல், வனப்பகுதி அழிவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தகவல் சுரங்கம்
தேசிய பெண் குழந்தைகள் தினம்
பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, உரிமை வழங்க வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் ஜன. 24ல் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 2008ல் இத்தினம் உருவாக்கப்பட்டது. ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, சுகாதாரம், சத்தான உணவு உள்ளிட்ட அனைத்தும், பாலின பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. பெண் குழந்தையை சுமையாக கருதாமல், அவர்களை வீட்டில் இருக்கும் தேவதையாக கொண்டாட வேண்டும். இவ்விஷயத்தில் தற்போதைய சமூகம் மாறத் தொடங்கி இருக்கிறது.