விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'ஒன்றரை கோடி தொண்டர்கள் உடைய அ.தி.மு.க.,வை முடக்க, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். அவரது தந்தை கருணாநிதியாலே, நம் கட்சியை முடக்க முடியவில்லை.
'லோக்சபா தேர்தலோடு, சட்டசபை தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு, மக்கள் தயாராக இருக்க வேண்டும்; நாமும் தயாராக வேண்டும். இந்த தேர்தலோடு, தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டி விடுவர்' என்றார்.
கட்சி நிர்வாகி ஒருவர், 'நடக்கிற குழப்பத்தை பார்த்தா, ஈரோடு இடைத்தேர்தலில், நம்ம கட்சி தேறுமான்னே தெரியல... இதுல லோக்சபாவோட, சட்டசபைக்கும் தேர்தல் நடந்தா, நம்ம கட்சிக்கு இப்ப இருக்கிற, 66 எம்.எல்.ஏ.,க்களும் அம்போ தான்...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.