சென்னை, இந்திய அஞ்சல் துறை சார்பில், 'அம்ரித்பெக்ஸ்- - 2023' எனும் பெயரில், தேசிய அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி நடக்க உள்ளது.
இதன் முன்னோட்டமாக, சிறிய அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி, சென்னை, அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் அஞ்சல் தலை அருங்காட்சி பணியகத்தில், வரும் 26 முதல் 28ம் தேதி என, மூன்று நாட்களுக்கு நடக்கின்றன.
இதில், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளிட்டோரின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறைகளும் இடம் பெறுகின்றன.