காஞ்சிபுரம் சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், 'ஏ' மற்றும் பி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் 'ஏ' பிரிவு கல்லுாரிகளுக்கு இடையே 'ஹேண்ட்பால்' விளையாட்டு போட்டி, காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இப்போட்டியில் சென்னை குருநானக், மாநில, நியூ, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் உட்பட மொத்தம் 12 கல்லுாரிகளின் ஆடவர் அணிகள் பங்கேற்றன. காஞ்சிபுரம் பச்சையப்பன், சென்னை குருநானக் கல்லுாரி இடையே, இறுதிப் போட்டி நடந்தது.
இதில் 34 - -27 என்ற புள்ளிக்கணக்கில், பச்சையப்பன் கல்லுாரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.
குருநானக் கல்லுாரி இரண்டாம் இடத்தையும், சென்னை மாநிலக் கல்லுாரி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களை, பச்சையப்பன் கல்லுாரி பொறுப்பு முதல்வர் முனைவர் ராஜேந்திரன் பரிசு வழங்கினார்.